வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் வாஜ்பாய் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறார்; பிரதமர் மோடி

வாஜ்பாயின் 7வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது
டெல்லி,
பாஜக மூத்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்த வாஜ்பாய் 1957ம் ஆண்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 1998ம் ஆண்டு முதல் 2004 வரை நாட்டின் பிரதமராக வாஜ்பாய் செயல்பட்டார். இதையடுத்து 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16 ம் தேதி தனது 93வது வயதில் உயிரிழந்தார்.
இந்நிலையில், அடல் பிகாரி வாஜ்பாயின் 7வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தில் அவரை நாம் நினைவுகொள்வோம்.
இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் வாஜ்பாய் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறார்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






