

புதுடெல்லி,
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிறது.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு வாஜ்பாய் உருவப்படத்தை திறந்துவைக்கிறார். விழாவில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.