

கவர்னர் வஜூபாய் வாலா
கர்நாடக மாநில கவர்னராக இருந்து வருபவர் வஜூபாய் வாலா. இவர், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கவர்னராக பதவி ஏற்றுக் கொண்டு இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் அவர் 5 ஆண்டுகளை நிறைவு
செய்தார். இதையடுத்து, கவர்னர் வஜூபாய் வாலாவை மாற்றிவிட்டு, புதிய கவர்னர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் மாற்றப்படவில்லை.பின்னர் கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதம் கவர்னர் வஜூபாய் வாலா 6 ஆண்டுகளை நிறைவு செய்தார். அப்போதும் அவர் மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டது. கவர்னர் பதவியில இருந்து வஜூபாய் வாலாவை மாற்றுவது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அவர் தொடர்ந்து கவர்னராக இருந்து வருகிறார்.
7 ஆண்டுகளை நிறைவு செய்து...
தற்போது 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்தால், கர்நாடக கவர்னராக வஜூபாய் வாலா பதவி ஏற்று 7 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார். இதன்மூலம் கர்நாடகத்தில் கவர்னராக அதிக ஆண்டுகள் இருந்தவர்களில் 2 இடத்தை வஜூபாய் வாலா பிடித்துள்ளார். இதற்கு முன்பு குர்ஷித் ஆலம்கான் என்பவர் கர்நாடக கவர்னராக 7 ஆண்டுகள் 330 நாட்கள் பதவியில் இருந்து, கர்நாடகத்தில் அதிக நாட்கள் கவர்னராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இவருக்கு அடுத்ததாக வஜூபாய் வாலா 6 ஆண்டுகள் 9 மாதங்கள் கவர்னராக இருந்து வருகிறார். இன்னும் 3 மாதங்கள் அவர் கவர்னராக இருந்தால், 7 ஆண்டுகளை நிறைவு செய்து, 8-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.