மும்பை-காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் சேதம்

வந்தே பாரத் ரெயில் மீது மாடு மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளது.
மும்பை-காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் சேதம்
Published on

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை குஜராத் அதுல் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த ரெயில் மீது மாடு மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், ரெயில் என்ஜினின் முன்பகுதியில் சிறிதளவு சேதமடைந்தது. இதனையடுத்து ரெயில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதன் மூலம் இந்த மாதத்தில் (அக்டோபர்) 3-வது முறையாக வந்தே பாரத் ரெயில் விபத்தில் சிக்கி உள்ளது.

முன்னதாக, கடந்த 6-ந் தேதி வத்வா ரெயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரெயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது காட்டெருமை கூட்டம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரெயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது.

இதேபோல், கடந்த 7-ந்தேதி மீண்டும் கால்நடை மீது மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்தது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com