கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா பதவி ஏற்றார்

கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா நேற்று தனது பதவியை ஏற்றுக் கொண்டார்.
தலைமை செயலாளர் வந்திதா சர்மா
தலைமை செயலாளர் வந்திதா சர்மா
Published on

பெங்களூரு:

கர்நாடக அரசின் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தவர் ரவிக்குமார். அவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா பதவி ஏற்று கொண்டார். அவர் 1986-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அவர் கர்நாடக அரசின் 39-வது தலைமை செயலாளர் ஆவார். இதற்கு முன்பு பெண்கள் தலைமை செயலாளர் பதவியை 2000-ம் ஆண்டு தெரசா பட்டாச்சார்யா, 2006-ம் ஆண்டு மாலதி தாஸ் மற்றும் 2017-ம் ஆண்டு ரத்னபிரபா ஆகியோர் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வந்திதா சர்மா அடுத்த ஆண்டு(2023) நவம்பர் மாதம்

30-ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.சட்டசபை செயலாளராக விசாலாட்சி, மேல்-சபை செயலாளராக மகாலட்சுமி ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தின் உயரிய பதவியான தலைமை செயலாளராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் விதான சவுதாவில் மூன்று முக்கியமான பதவிகளை பெண்கள் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com