காங்கிரஸ் வெற்றி; பா.ஜனதா முதல்வர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்

சத்தீஷ்கார், ராஜஸ்தானில் பா.ஜனதா முதல்வர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
காங்கிரஸ் வெற்றி; பா.ஜனதா முதல்வர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்
Published on

ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் பா.ஜனதா ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ளது. சத்தீஷ்கார் பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோன்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் தன்னுடைய ராஜினாமாவை வழங்கியுள்ளார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த வசுந்தரா ராஜே பேசுகையில், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அதிகளவில் பணிகளை மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியும் வளர்ச்சி பணிகளை தொடரும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்காரில் ராஜினாமா செய்த ராமன் சிங் பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜனதா தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மக்களுக்காக உழைத்ததை என் அதிர்ஷடமாக கருதுகிறேன். வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com