ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்

ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், நோய் பரவலைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,16,130 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 13,01,19,310 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஒரு வாரகால முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. நாடு முழுவதும், மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் வகையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com