

பெங்களூரு,
தமிழகத்தில் சத்தியமங்கலம் காட்டு பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்தவர் வீரப்பன். யானைகளையும் வேட்டையாடி வந்துள்ளார்.
கர்நாடகாவில் வீரப்பன் கூட்டாளிகள் 1993ல் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 22 போலீசார் பலியாகினர். இதுவரை வன துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் என்று 97 பேர் வீரப்பனால் கொல்லப்பட்டு உள்ளனர்.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா என 3 மாநில போலீசாரின் பிடியில் இருந்து சிக்காமல் தப்பி வந்த அவர் 15 வருட தேடுதலுக்கு பின் 2004ம் ஆண்டில் சுட்டு கொல்லப்பட்டார்.
இவரது கூட்டாளிகளில் ஒருவரான சைமன் கைது செய்யப்பட்டு கர்நாடகாவில் பெங்களூரு சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சைமன் உடல் நல குறைவால் சிறையில் உயிரிழந்து உள்ளார்.