பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை

வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை 80 சதவீதம் உயர்ந்ததாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி, பருவநிலை தாக்க ஆராய்ச்சிக்கான போட்ஸ்டம் இன்ஸ்டிடியூட், இங்கிலாந்தின் உணவு அறக்கட்டளை ஆகியவை 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 18 நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் உணவுப்பொருட்கள் விலை உயர்ந்தது பற்றி ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில், 2024-ம் ஆண்டு மிகவும் வெப்பமயமான ஆண்டாக இருந்ததாகவும், சர்வதேச சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக, இந்தியாவில் மே மாதம் வெப்பஅலை உருவாகி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை 80 சதவீதம் உயர்ந்ததாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






