இந்தியா சைவ நாடு என்பது கட்டுக்கதை? 70 சதவிகித மக்கள் அசைவம் உண்கிறார்கள்

தேசிய அளவில் எடுத்த ஆய்வில் 70 சதவிகித மக்கள் அசைவம் உண்கிறார்கள் என தெரியவந்து உள்ளது.
இந்தியா சைவ நாடு என்பது கட்டுக்கதை? 70 சதவிகித மக்கள் அசைவம் உண்கிறார்கள்
Published on

உலகில் இந்தியா மிகவும் முக்கியமான சைவ நாடு என்று நம்பபடுகிறது.இந்த நம்பிக்கையை இந்திய பிரதமர் ஒவ்வோரு வெளிநாட்டு பயணத்தின் போது பலப்படுத்தி வருகிறார். அவர வெளிநாட்டு பயணத்தின் போது அந்த நாட்டு முக்கிய தலைவர்களால் அவருக்கு சிறப்பு சைவ உணவுகள் விருந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் பிரதமர் மோடி அந்த நம்பிக்கையை பலப்படுத்திவருகிறார்.

சைவ உணவுமுறை இந்தியாவில் நெறிமுறை, மத மற்றும் சாதிகளின் சித்தாந்தங்களால் உற்சாகப்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் வெளியிட்டுள்ள மாதிரி பதிவு முறை (எஸ்ஆர்எஸ் ) 2014 வெளியிடப்பட்ட அடிப்படை ஆய்வில் 15 வயதிற்கு உட்பட்ட இந்தியர்களில் 71 சதவிகிதம் அசைவ சைவ உணவு உண்பவர்கள் என கூறப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் அசைவ உணவு உண்பவர்கள் சதவீதம் 2004 ல் இருந்து 75 சதவிகிதத்தில் இருந்து குறைந்து உள்ளது.

நாட்டில் 98.8 சதவீதம் ஆண்கள், 98.6 சதவிகிதம் பெண்கள் இறைச்சி, கேழி மற்றும் மீன் ஆகியவற்றை உண்டு வருகின்றனர்.

அதிக அளவிலான அசைவ உணவு பழக்கம் உள்ள மற்ற மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம் (98.55%), ஒடிசா (97.35%), கேரளா (97%), மேற்கு வங்கம் (98.55%).

ராஜஸ்தான் அதிக அளவு சைவ உணவு உண்பவர்கள் 73.2 % ஆண்களும் 76.6 % பெண்களும் சைவ உணவு உண்பவர்கள்.அடுத்து அரியானா 68.5 % ஆண்களும் 70% பெண்களும் சைவ உணவு உண்பவர்கள்.பஞ்சாபில் 65.5 % ஆண்களும் 68 % பெண்களும் சைவ உணவு உண்பவர்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com