பஞ்சாப்பில் வாகனங்கள் மோதல்; 7 பேர் பலி

அந்த வாகனம் ஜலாலாபாத் நகரில் இருந்து பியாஸ் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பஞ்சாப்பில் வாகனங்கள் மோதல்; 7 பேர் பலி
Published on

பெரோஸ்பூர்

பஞ்சாப்பின் பெரோஸ்பூர் நகரில் ஜங்காவாலா மோர் பகுதியருகே பெரோஸ்பூர்-பசில்கா சாலையில் லாரி ஒன்றும் ஆட்களை ஏற்றி வந்த மற்றொரு வாகனமும் திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டன.

இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் காயமடைந்தனர். அந்த வாகனம் ஜலாலாபாத் நகரில் இருந்து பியாஸ் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, பெரோஸ்பூர் நகரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். படுகாயமடைந்தவர்கள் பரீத்கோட் பகுதியில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com