

பூஞ்ச்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 6 பேர் பலியாகி உள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ஷீந்திரா என்ற இடத்திற்கருகே சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று இன்று மாலை திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் ஆவர். தவிர 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.