அனுமதியின்றி பறக்கும் ட்ரோன்களை பிடிக்க வாகனம்: அறிமுகம் செய்த கேரள காவல்துறை

இந்தியாவிலேயே முதல்முறையாக, கேரள மாநில காவல்துறை அனுமதியின்றி பறக்கும் ட்ரோன்களை பிடிப்பதற்கான வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அனுமதியின்றி பறக்கும் ட்ரோன்களை பிடிக்க வாகனம்: அறிமுகம் செய்த கேரள காவல்துறை
Published on

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் கொச்சியில், சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கேரள காவல்துறை ஏற்பாடு செய்திருந்த 15 வது கோகோன் மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் சுமார் 1200 உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லூநர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், அனுமதியின்றி பறக்கும் ஆளில்லா விமானங்களைப் பிடிக்க கேரள காவல்துறை ஈகிள் ஐ என்ற பெயரில் ட்ரோன் டிடெக்டர் வாகனத்தை மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே மாநில காவல்துறை ஆளில்லா விமானத்தை கைப்பற்றும் வாகனத்தை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை. இதன் மூலம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் ட்ரோன்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியும்.

அனுமதியின்றி பறக்கும் ட்ரோன்களை இந்த வாகனத்தில் இருக்கும் லேசர் ரேடார் கன் மூலம் அழிக்க முடியும் . இந்த வாகனம் சுமார் எண்பது லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com