டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

டெல்லியில் ஜூலை மாதத் தொடக்கத்தில் 43.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். நாள்தோறும் அதிகரிக்கும் வெப்பநிலையால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவாக நடப்பு ஆண்டில் இந்த ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூலை மாதத் தொடக்கத்தில் 43.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகத் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஆண்டு சராசரி அளவைக் காட்டிலும் 6 டிகிரி செல்சியஸ் அதிகம் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல் நடப்பு பருவக்காலத்தின் சராசரி வெப்பநிலை அளவைக் காட்டிலும் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 31.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு பருவக்காலத்தில் டெல்லியின் அதிகபட்ச வெப்பநிலையாக 43.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28.2 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளன. முன்னதாக கடந்த 1987 மற்றும் 2012 ஆம் ஆண்டின் ஜூலை மாதங்களில் 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com