மாநிலங்களவையில் கண்ணீர் விட்டு அழுத வெங்கையா நாயுடு

இன்று காலை மாநிலங்களவையில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்தபோது அவை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதார்.
மாநிலங்களவையில் கண்ணீர் விட்டு அழுத வெங்கையா நாயுடு
Published on

புதுடெல்லி,

காலை மாநிலங்களவை கூடியதும் ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசித்த வெங்கையா நாயுடு, அப்போது ஆந்திர அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஜெய்பால் ரெட்டிக்கும், தனக்கும் இருந்த நட்பு குறித்து நினைவு கூர்ந்தார்.

ஜெய்பால் ரெட்டி உடனான தனது 40 ஆண்டுகால நட்பு மற்றும் அரசியல் பழக்கம் குறித்து பேசிய அவர், 1980 களின் ஆரம்பத்தில் ஆந்திர மாநில சட்டசபையில் தாங்கள் இணைந்து பணியாற்றியது குறித்தும் பேசினார். ஜெய்பால் ரெட்டியின் மறைவு தன்னை பெரிதும் பாதித்துள்ளதாக கூறிய அவர், அவையிலே கண்கலங்கி அழுதார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com