ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு

வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு
Published on: 

லக்னோ,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

பா.ஜனதா நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது. கூடுதல் சிவில் நீதிபதி சுபம் வர்மா தீர்ப்பு வழங்குகிறார். முன்னதாக இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com