நோட்டுகளை விட ஓட்டுகளின் வலிமையை அதிகரிக்கும்.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ்

விவி பாட் இயந்திரம் தொடர்பான விவகாரத்தில் அரசியல் கட்சிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் மறுப்பதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
நோட்டுகளை விட ஓட்டுகளின் வலிமையை அதிகரிக்கும்.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ்
Published on

புதுடெல்லி:

அரசியல் கட்சிகள் பெருமளவு நிதிகளை வாங்கி குவிக்க வழிவகை செய்துள்ள தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளனர். தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்று கூறிய நீதிபதிகள், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டமானது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பு, நோட்டுகளை விட ஓட்டுகளின் வலிமையை அதிகரிக்கும்.

வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கக்கூடிய விவி பாட் இயந்திரம் தொடர்பான விவகாரத்தில் அரசியல் கட்சிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருவதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என நம்புகிறோம். வாக்குப்பதிவு வெளிப்படையாக நடக்கிறது என்றால் ஏன் இந்த பிடிவாதம்?

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com