பிபோர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: வானிலை மையம் தகவல்

மிக தீவிர புயலான பிபர்ஜாய், .அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடைம் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
பிபோர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: வானிலை மையம் தகவல்
Published on

புதுடெல்லி,

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.

இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மராட்டிய மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறினர்.

இந்த நிலையில், பிபர்ஜாய் புயல்.அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுமையம் ஒரு டுவீட்டில் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரையோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், புயலால் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com