எனது ஒப்புதலின்றி 25 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்: மேற்கு வங்காள கவர்னர்

மேற்கு வங்காளத்தில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கும், கவர்னர் ஜெக்தீப் தாங்கருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. தனது ஒப்புதலின்றி மாநில அரசு துணைவேந்தர்களை நியமிப்பதாக கவர்னர் குற்றம் சாட்டி வருகிறார்.
எனது ஒப்புதலின்றி 25 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்: மேற்கு வங்காள கவர்னர்
Published on

இந்த நிலையில் டைமண்ட் ஹார்பர் மகளிர் பல்கலைக்கழகத்துக்கு சமீபத்தில் மம்தா பானர்ஜி துணைவேந்தர்களை நியமித்தார். இதனால் அதிருப்தி அடைந்த கவர்னர், மாநில அரசு மீது மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், கல்விசூழல்: ஆட்சியாளரின் சட்டம், சட்டத்தின் ஆட்சி அல்ல. வேந்தரின் (கவர்னர்) ஒப்புதல் இல்லாமல் இதுவரை 25 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என சாடியுள்ளார்.

அதேநேரம் கவர்னருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறியுள்ள மாநில அரசு, துணைவேந்தராக நியமனக்குழு தேர்வு செய்யும் நபருக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் தவறினால் கல்வித்துறை தனக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் அந்த நியமனங்களை செய்யும் என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com