

புது டெல்லி,
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தாவது:-
தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, நமது நாட்டின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், புதுமையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
1998-ஆம் ஆண்டு இதே நாளில், போக்ரான் சோதனை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுதச் சோதனைகள், பாரதத்தின் வியத்தகு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை உலகிற்கு உணர்த்தின. இது நமது தேசம் தன்னிறைவு மற்றும் உத்திசார் வலிமையை நோக்கிய தனது பயணத்தில் அடைந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக அமைந்தது.
நமது மக்களின் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் உந்தப்பட்டு, அறிவியல், புதுமை மற்றும் தொழில்நுட்ப துறைகளில் நமது தேசம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது.
தேசிய வளர்ச்சிக்கும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் பாரதம் தொடர்ந்து புதிய மைல்கற்களை எட்டி சாதிக்கட்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.