துணை ஜனாதிபதி தேர்தல் - ஜெகதீப் தங்கர் இன்று மனுதாக்கல் செய்கிறார்

அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது.

இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 5ம் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற 22-ம் தேதி கடைசி நாள் ஆகும். துணை ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள். மட்டுமே வாக்களிப்பார்கள். பாராளுமன்றம் மற்றும் மேல்சபையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்.

எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பதால் ஓட்டுப்பதிவு பாராளுமன்றத்தில் மட்டுமே நடக்கிறது. இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தங்கர் இன்று மதியம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com