பள்ளிக்குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன் தினத்தை கொண்டாடிய துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ரக்‌ஷா பந்தன் தினத்தை பள்ளிக்குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
பள்ளிக்குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன் தினத்தை கொண்டாடிய துணை ஜனாதிபதி
Published on

பெங்களூரு,

இந்தியாவில் நேற்று ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்பட்டது. ரக்ஷா பந்தன் தினத்தன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் அவர்களது சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடினர்.

அந்த வகையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ரக்ஷா பந்தன் தினத்தை பள்ளிக்குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் துணை ஜனாதிபதிக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com