துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? ஓவைசி அறிவிப்பு

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐதராபாத்,
துணை ஜனாதிபதி தேர்தல் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட உள்ளனர்.இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:
“தெலுங்கானா முதலமைச்சர் அலுவலகம் இன்று என்னை தொடர்பு கொண்டு, துணை ஜனாதிபதி தேர்தலில் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஹைதராபாதைச் சேர்ந்த சட்ட வல்லுநருமான சுதர்சன் ரெட்டிக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆதரவை வழங்கும். சுதர்சன் ரெட்டியிடம் நான் பேசி, அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.” இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. ஒவைசி பாராளுமன்ற மக்களவையில் எம்.பி.யாக உள்ளார்.






