துணை ஜனாதிபதி தேர்தல்: உத்தவ் தாக்கரேயிடம் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார்

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்
துணை ஜனாதிபதி தேர்தல்: உத்தவ் தாக்கரேயிடம் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார்
Published on

மும்பை,

நாட்டின் துணை ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திராவை சேர்ந்தவரும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான பி.சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டு உள்ளார். இந்தநிலையில் உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் பேசியதாவது:-

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் எங்கள் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டு அவர்களது வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரினர். இதேபோன்று அவர்கள் மற்றவர்களிடம் ஆதரவு கேட்டு இருப்பார்கள். இது அவர்களின் பணியாகும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com