

புதுடெல்லி,
குடியரசு துணை தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது.
இதனை தொடர்ந்து புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர்.
வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாரதீய ஜனதாவின் வெங்கய்யா 102 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி 25 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் வெங்கய்யா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.