திருப்பதியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு

திருப்பதியில் அனைவரின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்தேன் என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருப்பதியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு
Published on

திருப்பதி,

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக நேற்று திருமலைக்கு வந்தார். அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தநிலையில்,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவருக்கு கோவில் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், "திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் அமைதி மற்றும் அனைவரின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com