சிறையில் கைதிகளுடன் ஆடிப்பாடி பஜனை! வயோதிக சாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் சாமியார் ஆசாராம்க்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் கைதிகளுடன் ஆடிப்பாடி பஜனை! வயோதிக சாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

ஜோத்பூர்,

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் சாமியார் ஆசாராம்க்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மத்திய சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் தன்னை ஜாமீனில் வெளிவர அனுமதிக்க வேண்டும் என்று மனு தொடர்ந்திருந்தார்.

இதற்கிடையே, மார்ச் 1 அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்ட நிலையில். அவர் சிறையில் இருந்து கொண்டு ஆடிப்பாடி கொண்டாடினார். இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஆனால் அவர் தனக்கு தீவிர உடல்நலக்கோளாறு இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஜாமீன் கோரும் நபர் எப்படி இவ்வாறு ஆடிப்பாடி இருக்க முடியும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை கொண்டாடும் விதமாக சிறையில் பஜனை ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில் இந்த முறையும் விடிய விடிய பஜனை நடைபெற்றது.

தற்போது சிறையில் இருப்பதால் சாமியார் ஆசாராமும் இந்த பஜனையில் கலந்து கொண்டு ஆடிப்பாடினார். சிறை கைதிகளும் சேர்ந்து ஆடினர்.

அவர் ஐகோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார். இதுவரை உடல்நிலை சரியில்லை என்று காரணம் காட்டி 15 முறை ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com