தேர்தல் தோல்வியை அடுத்து வாக்குகளுக்கு கொடுத்த பணத்தினை திருப்பி கேட்ட நபர்

தெலுங்கானாவில் உள்ளாட்சி தேர்தல் தோல்வியை அடுத்து வாக்குகளுக்கு கொடுத்த பணத்தினை திருப்பி தரும்படி நபரொருவர் கேட்ட வீடியோ வைரலாகி உள்ளது.
தேர்தல் தோல்வியை அடுத்து வாக்குகளுக்கு கொடுத்த பணத்தினை திருப்பி கேட்ட நபர்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. இதில் கடந்த ஜனவரி 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் முடிந்தது. 3ம் கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.

இந்த நிலையில், சூரியபேட்டை மாவட்டத்தில் ஜஜ்ஜிரெட்டி குடெம் கிராமத்தில் வார்டு உறுப்பினராக பெண் ஒருவர் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் அவர் தோல்வி அடைந்து விட்டார்.

இதனால் கொடுத்த பணத்தினை திருப்பி தரும்படி அந்த பெண்ணின் கணவரான பிரபாகர் என்பவர் வாக்காளர்களிடம் கேட்டு உள்ளார். இதுபற்றிய வீடியோ வெளிவந்து வைரலானது. இதனை அடுத்து இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இதில் தேர்தல் சட்ட விதிமீறல்கள் எதுவும் உள்ளனவா என்பது பற்றியும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com