

பெங்களூருவில் இருந்து மும்பைக்கு படுக்கை வசதி கொண்ட வந்தேபாரத் ரெயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரெயில் சேவை ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேர் கார் எனப்படும் இருக்கை வசதி கொண்ட வந்தேபாரத் ரெயிலில் பயணிகள் சொகுசு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் படுக்கை வசதி வந்தே பாரத் ரெயில் எப்படி இருக்கும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பெங்களூரு-மும்பை இடையே இயக்கப்படும் படுக்கை வசதி வந்தே பாரத் ரெயிலின் வீடியோவை பா.ஜனதா தனது அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. படுக்கை வசதி வந்தே பாரத் ரெயிலின் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியின் பிரமிக்க வைக்கும் உட்புற வடிவ மைப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரு கிறது.
வழக்கமான ரெயில்களில் காணப்படும் நெரிசலான படுக்கைகள், வசதியற்ற கழிவறை என்ற பிம்பத்தை மாற்றி இந்த பெட்டிகள் உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பில் உரு வாக்கப்பட்டுள்ளன. ஒரு நட்சத்திர ஓட்டலை போல இந்த ரெயில் ஜொலிக்கிறது. இந்த ரெயில் சேவைக்கு வரும் முன்பே, பயணிகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப டுத்தி உள்ளது.