

புதுடெல்லி
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுக்க கர்நாடக தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவில் தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
காங்கிரஸ் - பாரதீய ஜனதா இருபெரும் தேசிய கட்சிகளும் இப்போதே கர்நாடக மாநில தேர்தலுக்கு தயாராகிவிட்டது. பிரதமர் மோடி கர்நாடகா சென்று வந்ததில் இருந்து டுவிட்டர் மூலம் சித்தராமையாவும், எடியூரப்பாவும் டிவிட்டரில் சண்டை போட்டு வருகிறார்கள். கர்நாடக அரசை ஊழல் அரசு என விமர்சனம் செய்த பிரதமர் மோடிக்கு, எடியூரப்பாவை வைத்துக்கொண்டு ஊழல் பற்றி பேசலாமா? என பதிலடி கொடுத்தார் சித்தராமையா. டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு கேள்வி கணைகளை தொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் நடிகை திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் மோடி குறித்து கருத்து தெரிவித்தார் இது மிகவும் வைரல் ஆகியது. தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
தற்போது பாரதீய ஜனதா ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா இன்று ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அது மீண்டும் டுவிட்டரில் புதிய போருக்கு காரணமாக அமைந்தது.
அந்த வீடியோவில் மோடி அரசைப் பற்றி மக்களுக்கு தவறான தகவல்களைத் தருவதற்காக போலி கணக்குகளை தொடங்க கட்சி ஊழியர்களை சமூக ஊடக பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா கேட்டு கொண்டதாக கூறப்பட்டு உள்ளது.
அந்த வீடியோவில் ஒரு பெண் சுத்தமான கன்னடத்தில் பேசுகிறார். அதில் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்குங்கள் தவறு இல்லை. என கூறப்படுகிறது அந்த பெண் திவ்யா என மாளவியா கூறுகிறார்
மேலும் அந்த பெண் கூறும் போது இன்று நீங்கள் அனைவரும் 3 கணக்குகளை உருவாக்க வேண்டும். ஒன்று உங்கள் பெயரில் மற்றொன்று யாராவது பெயரில் மற்றும் ஸ்ரீவாஸ்தவாவின் பெயரால் மூன்றாவது. போலி கணக்குகள் அது ஒரு ரோபோ, அது ஒரு நபர் அல்ல என கூறப்பட்டு உள்ளது.
After a failed attempt to deploy BOTS in order to shore up Rahul Gandhis popularity on social media, Divya Spandana, in-charge of Congresss digital communication, caught on camera urging workers to create multiple fake accounts to spread misinformation about Modi govt... pic.twitter.com/x3scrf9ojF
Amit Malviya (@malviyamit) 7 February 2018
அந்த வீடியோ மாற்றப்பட்டு உள்ளது என காங்கிரஸ் சமூக ஊடக தலைமை வெளியிட்ட டுவிட்டரில் இந்த குற்றசாட்டுகளை மறுத்து உள்ளது. திவ்யா ஸ்பந்தனா கூறும் போது தங்கள் வசதிக்காக வீடியோ திருத்தப்பட்டது! மகிழுங்கள் என கூறி உள்ளார்.