குடிபோதையில் இளம்பெண் சேட்டை...! போலீஸ் அதிகாரியை தாக்க முயற்சி...!

குடிபோதையில் இளம்பெண் ஒருவர் போலீஸ் அதிகாரியை தாக்க முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குடிபோதையில் இளம்பெண் சேட்டை...! போலீஸ் அதிகாரியை தாக்க முயற்சி...!
Published on

மும்பை

மும்பையில் மது விருந்து முடிந்து நள்ளிரவு வந்த ஓலா வண்டியில் இருந்த இளம்பெண்கள் சிலரை போலீசார் ரோந்து பணியின் போது மடக்கி பிடித்துள்ளனர். அவர்களை விசாரணை செய்த சமயத்தில் காவல்துறையினரை நோக்கி வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த இளம்பெண் ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்ட துவங்குகிறார்.

அதிக மது போதையில் இருந்த அந்த பெண் போலீஸ் அதிகாரியை சீண்டி அவரின் தலை முடியை பிடித்து இழுத்து, எட்டி உதைக்க முயற்சி செய்கிறார். போலீஸ்காரர் அணிந்திருந்த மாஸ்கை கழற்றி அதனை கிழிக்கவும் முயற்சிக்கிறார். நடு ரோட்டில் படுத்துக்கொண்டு உச்சபட்ச போதையில் இந்த பெண் செய்யும் அநாகரீகமான செயல்களை அங்கிருந்த வாகன ஓட்டுநர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர் . அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com