வியட்நாம் படகு விபத்து; உயிரிழந்த 15 பேரின் விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு

இதில் உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வியட்நாம் படகு விபத்து; உயிரிழந்த 15 பேரின் விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

படகு விபத்து

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 35 பேர் இன்று காலை பு குவாக் தீவுக்கு படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

படகில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை உயிருடன் மீட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

பட்டியல் வெளியானது

ஆனாலும், இந்த சம்பவத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வியட்நாம் நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்:

  1. செந்தில் குமார் ஜெயவேல்

  2. முருக பிரபு ஆறுமுகம்

  3. ஸ்ரீதர் சுந்தரராஜன்

  4. ஷேக் அப்துல்லா அப்துல் மஜீத்

  5. பாலாஜி நடேசன்

  6. விநய குமார் சித்தாபுரம் பாஸ்கரா

  7. ரவிசங்கர் சுகுமாரன்

  8. சந்தோஷ் குமார் சாந்திலால் ஜெயின்

  9. பாபு குப்புசாமி

  10. அழகுராஜன் சிவசாமி

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்:

  1. நல்லபெட்டா ஆதிசேஷையா ரவிதேஜா

  2. ஸ்ரீதர் முதியம்

  3. ஜெயலட்சுமி கெல்லி

கேரளாவைச் சேர்ந்தவர்கள்:

  1. அவிகாட் செரியன் தாமஸ்

  2. லோவினி தாமஸ்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com