எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சோதனையின் முடிவில் எம்.எல்.ஏ. கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்-மந்திரியாக பகவந்த் மான் செயல்பட்டு வருகிறார். இதனிடையே அம்மாநிலத்தின் மத்திய ஜலந்தர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராமன் அரோரா. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல் ஜலந்தர் மாநகராட்சி திட்டக்குழு துணைத்தலைவர் சுக்தேவ் மீது லஞ்ச புகார்கள் இருந்தன.

ராமன் அரோராவின் அறிவுறுத்தலிலேயே சுக்தேவ் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதை பங்கிட்டுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சுக்தேவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராமன் அரோரா வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையின் முடிவில் எம்.எல்.ஏ. ராமன் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com