விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சி சொத்துக்கள் பொதுத்துறை வங்களின் பெயருக்கு மாற்றம்

விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சி சொத்துக்கள் பொதுத்துறை வங்களின் பெயருக்கு மாற்றம் செய்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சி சொத்துக்கள் பொதுத்துறை வங்களின் பெயருக்கு மாற்றம்
Published on

புதுடெல்லி

பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர்.

இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. வெளிநாடுகளில் இருக்கும் விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் அதிபர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. விஜய் மல்லையா லண்டனில் இருந்தபடி, தனக்கு எதிரான வழக்குகளை சந்தித்து வருகிறார்.

தப்பியோடிய மூன்று பேரும் பொதுத்துறை வங்கிகளில் 22,586 கோடி மோசடி செய்துள்ளனர்.

வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சி ஆகியோருக்கு சொந்தமாக ரூ.9,371 கோடி சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. தற்போது இந்த முடக்கப்பட்ட சொத்துக்கள் பொதுத்துறை வங்களின் பெயருக்கு மாற்றம் செய்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. இது இழப்புகளில் 40% ஆகும் என்று அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com