

திருவனந்தபுரம்,
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியை பெற மத்திய அரசின் அனுமதி அவசியமானது. இப்போது ஐக்கிய அரபு எமிரெட்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என தகவல் வெளியாகியது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசுகையில், கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆகஸ்ட் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும், 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.