விஜயவாடா-சென்னை சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

விஜயவாடாவில் இருந்து சென்னை மற்றும் திருப்பதி செல்ல கூடிய வழிகளில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
விஜயவாடா-சென்னை சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
Published on

விஜயவாடா

ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் மனுபோலு-கொம்மரபுடி ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கி பால் ஏற்றுவதற்காக வந்து கொண்டிருந்த போது, அந்த ரெயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இதனால்,விஜயவாடாவில் இருந்து சென்னை மற்றும் திருப்பதி செல்ல கூடிய வழிகளில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அந்த வழியே செல்லும் ரெயில்களின் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ரெயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. எனினும், ரெயில் தண்டவாளத்தில் சரிந்து கிடந்த ரெயில் பெட்டியை அகற்றும் மற்றும் ரெயில் சேவையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com