விஜயவாடா: வெயிலின் தாக்கத்தை சமாளிக்க நூதன முயற்சியில் இறங்கிய மாநகராட்சி

சாலைகளின் வெப்பத்தை குறைக்கவும் ஆண்டி-ஸ்மோக் கன் மூலம் தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விஜயவாடா: வெயிலின் தாக்கத்தை சமாளிக்க நூதன முயற்சியில் இறங்கிய மாநகராட்சி
Published on

அமராவதி,

ஆந்திராவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது. வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, வெப்பத்தின் கொடுமையை சமாளிக்கவும், சாலைகளின் வெப்பத்தை குறைக்கவும் ஆண்டி-ஸ்மோக் கன் மூலம் தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விஜயவாடா மாநகராட்சி, கடும் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் தெளிக்கபட்டது இதனால் மக்கள் சாலையில் சிரமமின்றி சென்றனர்.

சாலைகள் மற்றும் காற்றில் உள்ள வெப்பத்தை குறைத்து, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நிவாரணம் அளிப்பதே இதன் நோக்கமாக கருதபடுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com