சிக்கமகளூரு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக விக்ரம் அம்தே பதவி ஏற்பு

சிக்கமகளூரு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக விக்ரம் அம்தே பதவி ஏற்றார்.
சிக்கமகளூரு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக விக்ரம் அம்தே பதவி ஏற்பு
Published on

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் உமா பிரசாந்த். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாவணகெரே போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக விக்ரம் அம்தே நியமிக்கப்பட்டுள்ளார். புதிய போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் அம்தே, நேற்று சிக்கமகளூருவுக்கு வந்து தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த உமா பிரசாந்த் தனது பொறுப்புகளை விக்ரம் அம்தேவிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் அம்தே கூறுகையில், நான் இதற்கு முன்பு பெலகாவி, சிவமொக்கா மாவட்டங்களில் பணியாற்றி உள்ளேன். சிக்கமகளூருவில் தத்தா ஜெயந்தி விழாவின் போது மட்டும் இங்கு பணியாற்றியுள்ளேன்.

இப்போது சிக்கமகளூருவுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பொதுமக்களின் நண்பன், சட்டவிரோதமான செயல்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com