சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைசாமி நியமனம்

விக்ரம் துரைசாமி, தூதரக துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.
சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைசாமி நியமனம்
Published on

புதுடெல்லி,

சீனாவுக்கான இந்திய தூதராக தற்போது இங்கிலாந்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வரும் விக்ரம் துரைசாமி நியமிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. அவர் விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சீனாவுக்கான இந்திய தூதராக உள்ள பிரதீப் குமார் ராவத்திற்கு பதிலாக துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்ரம் துரைசாமி, தூதரக துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவர். அவர் பல முக்கிய தூதரக பொறுப்புகளை வகித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com