மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

விக்ரம் மிஸ்ரி தற்போது தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக இருந்து வருகிறார்
மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்
Published on

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக வினய் குவாத்ரா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஜூலை 14-ம் தேதி முடிவடைய உள்ளது.இந்நிலையில், புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவர் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக இருந்து வருகிறார்.1989-ம் ஆண்டு பிரிவு ஐ.எப்.எஸ். அதிகாரியான விக்ரம் மிஸ்ரி ஜூலை 15-ம் தேதிமுதல் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பை ஏற்கவுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com