புலிகள் கூட்டமாக உலா வருவதால் கிராம மக்கள் அச்சம்... கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்

சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மீது புலி பாய்ந்து தாக்கியது.
புலிகள்
Published on: 

மைசூரு,

நஞ்சன்கூடு அருகே கிராம பகுதியில் 4 புலிகள் உலா வந்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

தொடர் அட்டகாசம்

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவை ஒட்டியுள்ள மலைப்பகுதி கிராமங்களில் வன விலங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆக்கள கிராம பகுதியில் புலிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மீது புலி பாய்ந்து தாக்கியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள். நேற்று முன்தினம் பெண் ஒருவர் புலி தாக்குதலுக்கு ஆளாகி பரிதாபமாக பலியானார். அடுத்தடுத்து மனிதர்கள் மீது வனவிலங்குகள் தாக்குதல் நடத்தியது கிராம மக்களை பதற வைத்துள்ளது.

டிரோன் கேமரா

இந்தநிலையில், கிராமத்திற்கு மிக அருகில் 4 புலிகள் கூட்டமாக உணவு தேடி உலா வந்ததை கிராமவாசி ஒருவர் டிரோன் கேமரா மூலம் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. பெண் புலி ஒன்று குட்டி ஈன்று. அதே பகுதியில் குட்டிகளுடன் தங்கி நடமாடி வருவதாக வனத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஒற்றை புலியாக இருந்தால் கூண்டு வைத்து பிடிக்கலாம். ஆனால். புலிகள் கூட்டமாக உலாவுவதாலும், இன்னும் எத் தனை புலிகள் மறைந்திருக்கின்றன என்பது தெரியாததாலும் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். தங்களது குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் காப்பாற்றி கொள்ள திணறி வரும் பொதுமக்கள், தனியாக நடமாடவே பயப்படுகிறார்கள்.

வனத்துறை தீவிரம்

கிராம மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த கடும் பீதியை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளனர். புலிகளை கூண்டில் அடைக்க அல்லது தீவிர தேடுதல் வேட்டை நடத்திப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு போய் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். விரைந்து புலிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

X