உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி பேரழிவின் பின்னணியில் 100 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன கதிரியக்க சாதனம் ..?

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி பேரழிவின் பின்னணியில் 100 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன கதிரியக்க சாதனம் இருப்பதாக கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி பேரழிவின் பின்னணியில் 100 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன கதிரியக்க சாதனம் ..?
Published on

புதுடெல்லி

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பனிப்பாறைகள் உடைந்த தன் காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டதாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நிலச்சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சாமோலியின் தபோவன் பகுதியில் உள்ள ரெய்னி கிராமத்தின் கிராமவாசிகள் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் ஒரு கதிரியக்க சாதனத்தின் வெப்பத்தின் விளைவாக ஏற்பட்டு இருக்கலாம் என்று கவலையை வெளியிட்டு உள்ளனர்.

1965 ஆம் ஆண்டில் சிஐஏ மற்றும் ஐபி நடத்திய நந்தா தேவி ரகசிய பயணத்தின் போது இந்த சாதனம் தொலைந்து போனது, மலையின் உச்சியில் அணுசக்தியால் இயங்கும் கண்காணிப்பு கருவிகளை பொருத்த சென்ற போது இது நடந்து உள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த பகுதியாகும் (காஞ்சன்ஜங்காவுக்குப் பிறகு).

இருப்பினும், பயணத்தை மேற்கொண்ட மலையேறும் குழு ஒரு பனிப்புயலில் சிக்கி திரும்பி வர வேண்டியிருந்தது, அப்போது அந்த கதிரியக்க சாதனத்தை மலையின் அடிவாரத்தில் விட்டுவிட்டது. ஒரு வருடம் கழித்து, அவர்கள் மீண்டும் அந்தப் பகுதிக்குச் சென்றபோது, அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை; 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுட்காலம் கொண்ட இந்த சாதனத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அது அப்பகுதியில் எங்காவது இருப்பதாக நம்பப்படுகிறது.

சாமோலி மாவட்டத்தில் ரெய்னி கிராமத்திற்கு அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஞாயிற்றுக்கிழமை, கிராமவாசிகள், மலையிலிருந்து குப்பை மற்றும் இடிபாடுகள் உருண்டு விழுந்து வரும் போது காற்றில் மிகவும் கடுமையான வாசனையை கவனித்ததாக தெரிவித்தனர்.

வாசனை மிகவும் தீவிரமாக இருந்ததால் எங்களால் சிறிது நேரம் சுவாசிக்க முடியவில்லை. குப்பைகள் மற்றும் பனி மட்டுமே இருந்திருந்தால், அத்தகைய வாசனையை வந்திருக்காது. இதற்கு காரணம் எங்கள் கிராமத்தில் நீண்டகாலத்திற்கு முன் தொலைந்து போன கதிரியக்க சாதனமாக இருக்கலாம் .

இது எங்கள் பெரியவர்கள் எங்களிடம் கூறியது -இது இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்ற கவலையைத் தூண்டியுள்ளது, என்று ஜுக்ஜு கிராமத்தில் வசிக்கும் தேவேஸ்வரி தேவி கூறினார். இங்கிருந்து பல ஆண்கள் 1965 பயணத்தின் போது போர்ட்டர்களாக பணியாற்றி உள்ளனர்.

கதிரியக்க சாதனம் இப்பகுதியில் எங்காவது பனியின் கீழ் புதைக்கப்பட்டு வெப்பத்தை கதிர்வீசினால், நிச்சயமாக பனி உருகுவதும் மேலும் பனிச்சரிவுகளும் இருக்கும். மேலும் பேரழிவுகள் ஏற்படுமுன் உடனடியாக இந்த சாதனத்தைத் தேடும் நடவடிக்கையைத் தொடங்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம், என்று மற்றொரு கிராமவாசி சங்கிராம் சிங் ராவத் கூறினார்.

2018 ஆம் ஆண்டில், நந்தா தேவி வரம்பிலிருந்து கங்கைக்குள் பனிப்பொழிவை மாசுபடுத்தும் கதிரியக்க சாதனம் குறித்த பிரச்சினையை சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜ் எழுப்பியதோடு, இந்த விஷயத்தில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com