சூடானில் 3500 இந்தியர்கள் சிக்கி உள்ளனர்- வெளியுறவுத்துறை தகவல்

இந்தியர்களை மீட்பதற்காக 3வது கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் தர்காஷ், சூடான் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
சூடானில் 3500 இந்தியர்கள் சிக்கி உள்ளனர்- வெளியுறவுத்துறை தகவல்
Published on

புதுடெல்லி

உள்நாட்டு சண்டை மூண்டுள்ள சூடானில் இந்தியர்கள் சுமார் 3,500 பேரும், இந்திய வம்சாவளியினர் 1,000 பேரும் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சூடானின் நிலைமையை இந்திய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக 3வது கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் தர்காஷ், சூடான் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சவூதி அரேபியா இதுவரை இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வழங்கிய ஆதரவிற்காக இந்தியா "மிகவும் நன்றியுடையதாக இருக்கும் " மற்றும் சூடானில் உள்ள தனது குடிமக்களுக்கு உதவ செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது என கூறினார்.

சூடான் ராணுவமும் துணை ராணுவப்படையினரும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து, 'ஆபரேஷன் காவிரி' திட்டத்தின் கீழ் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அதன்படி, சூடானில் இருந்து இதுவரை 670 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகர் வழியாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மந்திரி ஜெய்சங்கர் சூடான் நிலைமை குறித்து இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ்சுடன் விவாதித்தார் 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com