காங்கிரசில் இணைந்தனர் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா

காங்கிரசில் இணைவதற்கு முன்னதாக வினேஷ் போகத் தனது ரெயில்வே பணியை ராஜினாமா செய்தார்.
காங்கிரசில் இணைந்தனர் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா
Published on

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்ததில் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வருகிற அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரசில் இணைவதற்கு முன்னதாக வினேஷ் போகத் இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வடக்கு ரெயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என்று வினேஷ் போகத் கூறியுள்ளார்.

முன்னதாக, நேற்று முன்தினம் டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்தித்தனர். அதன்பின்னர் இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலை அவரது இல்லத்தில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com