பிரபல இந்தி பாடகர் அன்கித் திவாரியின் தந்தையை தாக்கிய வினோத் காம்பிளியின் மனைவி

பிரபல இந்தி பாடகர் அன்கித் திவாரியின் தந்தையை முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளியின் மனைவி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபல இந்தி பாடகர் அன்கித் திவாரியின் தந்தையை தாக்கிய வினோத் காம்பிளியின் மனைவி
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியின் மனைவியிடம் பாலிவுட் இசையமைப்பாளர் அங்கீத் சர்மாவின் தந்தை தவறாக நடந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள இன்ஆர்பிட் மாலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அவரது மனைவி ஆண்ட்ரியாவுடன் மாலில் இருந்த போது ஆண்ட்ரியாவுடன் முதியவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆண்ட்ரியா மீது தவறாக கை வைக்க முயன்றதாக போலீசில் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆண்ட்ரியா அதே இடத்தில் அந்த முதியவரை அடித்துள்ளார். அதே சமயத்தில் எல்லோருக்கு முன் மோசமாக திட்டிவிட்டு சென்றுள்ளார். சில நிமிடம் கழித்து அந்த முதியவரின் மகன் அன்கூர் திவாரி அந்த மாலிற்கு வந்து ஆண்ட்ரியாவிடமும், வினோத்திடமும் சண்டை போட்டுள்ளார்.

அன்கூர் திவாரி பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் அன்கித் திவாரியின் சகோதரராவார். மாலில் அன்கூர் திவாரிக்கும் வினோத்திற்கும் இடையில் சிறிய கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அன்கூர் திவாரியும் அவரது தந்தை தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீஸ் இரண்டு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com