மணிப்பூரில் மீண்டும் வன்முறை; முதல்-மந்திரி பதவி விலக காங். வலியுறுத்தல்

மணிப்பூர் மாநில பா.ஜனதா அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
மணிப்பூர் வன்முறை
Published on: 

மணிப்பூரில் சமீப காலமாக வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வருகின் றன. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களும் தீவிரமடைந்து உள் ளன. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி கெம்சந்த் சிங் பதவி விலகவும், சட்டச பையை கலைக்கவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மணிப்பூருக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சப்தகிரி உலகா, மகிளா காங் கிரஸ் தலைவர் அல்கா லம்பா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தொடர் வன்முறையால் ஒட்டுமொத்த மாநிலமும் பற்றி எரிகிறது. இதற்கு மத்திய-மாநில அரசுகளே பொறுப்பு ஆகும்' என்று தெரிவித்தனர். மாநில பா.ஜனதா அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com