மணமேடையில் பப்ஜி விளையாடிய புதுமாப்பிள்ளை -வைரலாகும் வீடியோ

மணமேடையில் அமர்ந்துகொண்டு புதுமாப்பிள்ளை பப்ஜி விளையாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மணமேடையில் பப்ஜி விளையாடிய புதுமாப்பிள்ளை -வைரலாகும் வீடியோ
Published on

பெற்றோர்கள் முதல் அரசாங்கம் வரை அனைவருக்கும் பப்ஜி விளையாட்டு பிரச்சினையாகவே இருக்கிறது. பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேறெந்த விஷயத்திலும் கவனத்தை செலுத்தவிடாமல் அவர்களை முடக்கி விடுகிறது.

இந்த ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுவதாக பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். மாணவர்களின் கைகளில் செல்போன் இருப்பதால் அவர்கள் ஆன்லைன் கேம் விளையாடுவதை தடுக்க முடிவதில்லை. அந்தவகையில், பப்ஜி கேம் தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதே வேளையில் விளையாடுபவர்களை பப்ஜி விளையாட்டு அடிமையாக்கி விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய திருமணத்தின் போதே மணமேடையில் அமர்ந்து கொண்டு மணமகன் பப்ஜி விளையாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ எடுக்கப்பட்டு டிக் டாக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தன்னுடைய மனைவி அருகில் அமர்ந்து பார்த்துகொண்டு இருக்க புதுமாப்பிள்ளை கையில் செல்போனை வைத்துக்கொண்டு பப்ஜி விளையாடுகிறார். மேலும் ஒருவர் அன்பளிப்பு வழங்குகிறார். அதனை தட்டிவிடும் மணமகன் மீண்டும் பப்ஜியில் மூழ்குகிறார்.

இது உண்மையான வீடியோவா அல்லது டிக் டாக்குக்காக நடித்து எடுக்கப்பட்ட வீடியோவா என்பது தெரியவில்லை. ஆனால் மணமேடையில் புதுமாப்பிள்ளை பப்ஜி விளையாடும் வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com