தனக்கு விருப்பமானவைகள் குறித்து மனம் திறந்த உலக அழகி மனுஷி சில்லர்
புதுடெல்லி
இந்தியா டூடே இந்தி பதிப்பின் ஆஜ் தக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலக அழகி முஷி சில்லர் தனக்கு பிடித்தமான உணவு,அரசியல்வாதி என தனக்கு விருப்பமானவைகளை குறித்து பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
உங்கள் நாட்டில் நீங்கள் பிரபலமானவராக இருக்கும் போது ஏற்படும் உணர்வு வேறுபட்ட உணர்வு. நான் முதல் 5 அழகிகளில் ஒருவராக தேர்ந்து எடுக்கபட்ட போது தான் நான் போட்டியில் இருப்பதாக உண்மையில் உணர்ந்தேன். எப்படியோ, நான் அதை கடந்து செல்ல முடிந்தது. இறுதி அறிவிப்பு செய்யப்படும் போது, சீனர்கள் உள்பட எல்லோரும் இந்தியா என முழக்கமிட்டனர். ஜூலியா மோர்லியை அறிவிப்பதைக் கேட்க நான் விரும்பினேன்! "
நான் ஒரு அம்மாவின் பெண். நான் என் அப்பாவுக்கு செல்லமாக இருந்தேன் என் அம்மாவுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் பட்டம் வென்ற தருணத்தை எனது தாயாரை நினைத்தேன்.
சீனாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சீனாகள். சீன மக்கள் மிகவும் அன்பாக உள்ளனர்,"அவர்கள் இந்தியர்களைப் போலவே இருக்கிறார்கள், நாங்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கவில்லை."
பின்னர் மனுஷி தனக்கு விருப்பமானவைகளை வெளியிட்டார்.
உணவு: "மிஸ் இந்தியா அமைப்பாளர்கள் கூட என் உணவு குறித்து கட்டுப்படுத்த முடியாது என்று எனக்கு தெரியும். எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும். அம்மாவின் ராஜ்மா சாவால், கஜு கத்தலிஸ் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை. "
இசை: "எனக்கு நடனம் என்றால் விருப்பம் . பாலிவுட் இசை அல்லது நல்ல பழைய பஞ்சாபி பாப் இசை பிடிக்கும்.
கிரிக்கெட்: "விராட் கோலி" மிகவும் பிடிக்கும்
நடிகை: "பிரியங்கா சோப்ரா, நான் அவரை பாராட்டினேன், அவள் நன்றாக செய்து எல்லாவற்றையும் அவர் நிறைவேற்றினார். "
அரசியல்வாதி: எனது விருப்பமான அரசியல்வாதிகள் எப்போதும் இந்தியாவின் பிரதமராக இருப்பார்கள்,
எனக்கு குழந்தைகள் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

