

மும்பை
மும்பை- புனே இடையே "ஹைபர்லூப்' தொழில்நுட்பத்தில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த மகாராஷ்டிர மாநில அரசுடன் விர்ஜின் குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நவி மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்தப் போக்குவரத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.
பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஷ் முன்னிலையில் விர்ஜினிய ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ப்ரான்சன் உடன் கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியது.
இந்த ஒப்பந்தத்தின் படி, நாட்டின் வணிக தலைநகரமான மும்பையிலிருந்து தானேவிற்கு ஹைப்பர்லூப் ரயில் அறிமுகப்படுத்தபட உள்ளது. மேலும், 2024 -ம் ஆண்டு மொத்த பணிகளும் நிறைவு பெறும் என்றும் இத்திட்டமானது, இந்த ரயில் வெறும் 25 நிமிடங்களில் மும்பையிலிருந்து தானேவிற்கு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. இதற்காக 3,50,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விர்ஜினிய ஹைப்பர்லூப் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ப்ரான்சன் கூறுகையில்,
நாட்டிலேயே வருடத்திற்கு 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், மும்பையிலிருந்து தானேவிற்கு சென்று வருகின்றனர்.இவர்களின் பயண நேரம் 4 மணி நேரத்தை நெருங்கியுள்ளது. எனவே,பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு மகாராஷ்டிரா அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி,இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஹைப்பர்லூப் ரெயிலை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.இதன்மூலம் வெறும் 25 நிமிடங்களில் மும்பையிலிருந்து தானேவிற்கு செல்லலாம்.இதைத்தொடாந்து மூன்று ஆண்டுகளில் இதற்கான சோதனை ஓட்டமும், ஆறு ஆண்டுகளில் இத்திட்டமும் நிறைவு செய்வோம் எனத் தெரிவித்தார்.
உறை (pod) போன்று வடிவமைக்கப்படும் ஒரு பெட்டியில் பயணிகள் மற்றும் பொருள்களை வைத்து மின் மோட்டார்கள் மூலம் காந்தவிசையைக் கொண்டு வெற்றிடக் குழாய்களில் உந்தித் தள்ளும் முறையில் இந்த புதிய போக்குவரத்துக்கான பணிகள் உலகெங்கிலும் தற்போது நடைபெற்று வருகின்றன.
தற்போதுள்ள வழக்கமான பயணத்தின்போது உராய்வு மற்றும் காற்றுத் தடையால் வேகம் கட்டுப்படுத்தப்படுவது போன்ற பிரச்னைகள் ஹைபர்லூப் போக்குவரத்தில் இருக்காது. இதற்கென தரைக்குமேல் ஹைபர்லூப் தொழில்நுட்பத்தில் இரு ஊர்களை இணைக்கும் வகையில் பிரமாண்டமான காலிக்குழாய்களைக் கொண்டு தொடர்ச்சியாக அமைக்கப்படும் பாதையில் எந்தத் தடையுமின்றி மணிக்கு 450-1000 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்ல முடியும்
இந்நிலையில் மும்பை-புனே இடையே ஹைபர்லூப் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.