கேரளா லாட்டரி: கன்னியாகுமரியை சேர்ந்தவருக்கு அடித்தது யோகம்..! ரூ.10 கோடி ஜாக்பாட்

கடந்த 22 ந் தேதி குலுக்கல் நடந்த இந்த பரிசு சீட்டின் அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது. 10 நாட்களுக்குப் பிறகு கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
கேரளா லாட்டரி: கன்னியாகுமரியை சேர்ந்தவருக்கு அடித்தது யோகம்..! ரூ.10 கோடி ஜாக்பாட்
Published on

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஓணம் பண்டிகை, மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை, கிறிஸ்துமஸ் போன்ற விழா காலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை மூலம் அதிஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மலையாள புத்தாண்டு தினமான விஷு தினத்தைக் கடந்த மாதம் லாட்டரி முன்னிட்டு முதல் பம்பர் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்ட லாட்டரி டிக்கெட் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது.

இதில், ஹெச்பி 727990 (HB 727990) என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது. அந்த சீட்டு வாங்கியது யார் எனத் தெரியவில்லை. ஒருவாரமாக அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்தவர்தான் பம்பர் பரிசு அடித்த லாட்டரி சீட்டு வாங்கியது தெரியவந்துள்ளது. இவரைப் பற்றிய விவரம் பின்வருமாறு:-

கன்னியா குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பாபுஜி தெருவை சேர்ந்தவர் டாக்டர் பிரதீப்குமார் (50).இவர் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக உள்ளார். இவரது மனைவி டாக்டர் லேகா வி.நம்பியார்(45). இவர் மணவாளக்குறிச்சியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 15 ம் தேதி டாக்டர் பிரதீப்குமார் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பி வந்த உறவினர் ஒருவரை அழைத்து வர திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். உடன் மைத்துனர் ரமேஷ் (64)என்பவரும் சென்றார்.

இருவரும் சேர்ந்து வாங்கிய கேரள விசு பம்பர் லாட்டரி சீட்டு எண் எச்.பி.727990 க்கு முதல் பரிசான .10 கோடி விழுந்தது. கடந்த 22 ந் தேதி குலுக்கல் நடந்த இந்த பரிசு சீட்டின் அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது. லாட்டரி ஏஜெண்டு மற்றும் லாட்டரி துறை அதிகாரிகள் இந்த அதிர்ஷ்டசாலியை கடந்த 10 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் டாக்டர் பிரதீப்குமார் மற்றும் உறவினர் ரமேஷ் திருவனந்தபுரம் சென்று கேரள மாநில லாட்டரி துறை இயக்குனர் அலுவலகத்தில் அதிர்ஷ்ட சீட்டை ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com